Normal
எரியாத உயர் கோபுர மின் விளக்குகள்
எரியாத உயர் கோபுர மின் விளக்குகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தஞ்சாவூர்
பிள்ளையார்பட்டி
தஞ்சை மேலவஸ்தாசாவடி ரவுண்டானா போக்குவரத்து நெரிசல் மிக்க முக்கிய சாலை ஆகும். இந்த சாலை வழியாக திருச்சி, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பிரிவு சாலையில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர். ஆகவே, ரவுண்டானா அருகே உள்ள உயர்கோபுர மின்விளக்குகளை எரியச் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story