பாதுகாப்பற்ற நிலையில் செல்லும் வாகனங்கள்


பாதுகாப்பற்ற நிலையில் செல்லும் வாகனங்கள்
x

திருவாரூரில் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் செல்லும் வாகனங்களை காக்க ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா ? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூரில் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் செல்லும் வாகனங்களை காக்க ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா ? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஆற்றங்கரை பகுதி

திருவாரூரில் இருந்து நீடாமங்கலம் வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஒரு புறம் ஆற்றங்கரை பகுதியாக இருந்து வருகிறது. இதனால் விபத்துக்களை தடுக்கும் வகையில் குறுகிய இடங்களில் ஆற்றின் கரையில் இரும்பு தகடுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தாசில்தார் அலுவலகம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை ஒரு புறம் ஒடம்போக்கியாற்றின் கரையையொட்டிய பகுதியாக இருந்து வருகிறது.

ஆற்றில் விழும் அபாயம்

இந்த கரை பகுதி எந்தவித இரும்பு தகடு தடுப்பின்றி உள்ளது. மேலும் ஆற்றின் கரை பகுதியில் பல இடங்களில் பலவினமாக எந்தவித சிமெண்ட் தடுப்பு சுவர் கட்டப்படாமல் உள்ளது. சாலையொட்டி ஆறு செல்வதால் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு வழி விட முடியாமல் இருசக்கர வாகன ஒட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆற்றின் கரை பலவீனமடைந்துள்ளதால் சற்று தடுமாறினாலும் ஆற்றில் விழ வேண்டிய ஆபத்தான நிலை இருந்து வருகிறது.

தடுப்புச்சுவா்

இந்த பகுதி திருவாரூர் நகரின் பிரதான தேசிய நெடுஞ்சாலை என்பதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் பகுதியாக இருந்துவ வருகிறது. மாநில நெடுஞ்சாலைகளில் கூட சாலையோர ஆற்றின் கரை பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றின் கரை பகுதியில் தடுப்புகள் இன்றி உள்ளது. எனவே விபத்தை தடுக்கும் வகையில் ஒடம்போக்கியாற்றின் கரையில் சிமெண்டு தடுப்பு சுவர் கட்டுவதுடன், எச்சரிக்கை இரும்பு தகடு தடுப்பு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story