உப்புக்கோட்டை பகுதியில்பூத்துக்குலுங்கும் செவ்வந்தி பூக்கள்


உப்புக்கோட்டை பகுதியில்பூத்துக்குலுங்கும் செவ்வந்தி பூக்கள்
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உப்புக்கோட்டை பகுதியில் செவ்வந்தி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

தேனி

தேனி மாவட்டம் கோட்டூர், சீலையம்பட்டி, உப்புக்கோட்டை, வாழையாத்துப்பட்டி, பாலார்பட்டி, மற்றும் ஆண்டிப்பட்டி, மரிக்குண்டு அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மல்லிகை, முல்லை, ஜாதிப் பூ, சம்பங்கி, கனகாம்பரம், செண்டு பூ உள்ளிட்ட பூக்கள் சாகுடி செய்யப்படுகின்றன. இதில் செண்டு பூ, கோழி கொண்டை, மல்லிகை, வாடாமல்லி ஆகிய பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அதில் செவ்வந்தி பூக்கள் நன்கு விளைச்சல் அடைந்தது பூத்துக்குலுங்குகின்றன. இதனை காண்பதற்கு மஞ்சள் போர்வை போர்த்தியது போல் அழகாக உள்ளது. ஆனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து பூ சாகுடி செய்த விவசாயி கூறுகையில், நான் ஒரு ஏக்கர் பரப்பளவில் செவ்வந்தி பூ சாகுபடி செய்துள்ளேன். இதற்கு சுமார் 40 ஆயிரம் வரை செலவாகி உள்ளது. தற்போது பூ கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை போதுமானதாக இல்ல. ரூ.100 வரை விற்பனை செய்தால் நன்றாக இருக்கும் என்றார்.


Related Tags :
Next Story