உப்புக்கோட்டை பகுதியில் வெங்காயம் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி


உப்புக்கோட்டை பகுதியில்  வெங்காயம் விலை அதிகரிப்பு:   விவசாயிகள் மகிழ்ச்சி
x

உப்புக்கோட்டை பகுதியில் வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ளது.

தேனி

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு கடைமடை பகுதியான குச்சனூர், கூழையனூர், பாலார்பட்டி, குண்டல்நாயக்கன் பட்டி, உப்புக்கோட்டை உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெங்காயம், கொத்தமல்லி, கத்தரிக்காய், பீட்ரூட், காலிபிளவர், தக்காளி, என அனைத்து வகையான காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டின் அனைத்து பருவங்களிலும் காய்கறிகள் செய்யப்படுவதே இப்பகுதியின் சிறப்பம்சமாகும். முல்லைபெரியாற்று பாசனம் மூலம் விளைச்சல் அடையும் இப்பகுதி காய்கறிகள் சுவை மிகுந்ததாகவும், திரட்சியாகவும் இருக்கும். தற்போது உப்புக்கோட்டை பகுதியில் சாகுபடி செய்த வெங்காயங்கள் பறிக்கப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. போதிய பாசனம் மற்றும் நோய் தாக்குதல் இல்லாததால் வெங்காயம் நன்கு விளைச்சலடைந்துள்ளது. அதே நேரம் விலையும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வெங்காயம் சாகுபடி செய்த விவசாயி ஒருவர் கூறுகையில், ஒரு ஏக்கர் பரப்பளவில் வெங்காயம் சாகுபடி செய்தேன். நடவு செய்த நாளில் இருந்து 70-80 நாட்களில் வெங்காயம் விளைச்சல் அடைந்துவிடும். தற்போது வெங்காயம் நன்கு விளைச்சல் அடைந்துள்ளது. மேலும் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கிலோ ரூ.20-க்கு விற்பனையான வெங்காயம் தற்போது ரூ.65 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்‌.


Next Story