ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திருப்பத்தூர் டவுன் 36-வது வார்டு ஏரிக்கோடி குள்ளாச்சாரி வட்டம் ஊர் மாரியம்மன் மற்றும் சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 10-ந் தேதி மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை, பிரவேச பலி, தீபாராதனையுடன் தொடங்கியது. தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை, தம்பதிகள் சங்கல்பம் நடைபெற்றது.
பின்னர் கலச பூஜை செய்து, புறப்பாடு நடந்தது. சின்ன மாரியம்மனுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஊர் மாரியம்மன் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது பக்தர்கள் மாரியம்மா, ஆதிபராசக்தி என பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். பல பெண்கள் சாமி வந்து ஆடினார்கள். தொடர்ந்து சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சாமி திருக்கல்யாணமும், அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் டாக்டர் என்.திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏரிக்கோடி குள்ளாச்சாரி வட்டம் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.