சரக்கு ரெயில் மூலம் 1,225 டன் யூரியா வந்தது
சென்னையில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் 1,225 டன் யூரியா வந்தது.
தர்மபுரி
சென்னை மணலியில் இருந்து 1,225.80 டன் யூரியா சரக்கு ரெயில் மூலம் தர்மபுரிக்கு வந்தது. இந்த உரங்களை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்ப தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகமது அஸ்லாம் உத்தரவிட்டார். இதையடுத்து உரங்களை பிரித்து லாரிகளில் ஏற்றி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை வேளாண் தர கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளுக்கு 495 டன் யூரியா, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளுக்கு 730.80 டன் யூரியா லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டன. இந்த ஆய்வின்போது விற்பனை அலுவலர் மேகநாதன் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story