யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்கள் ரெயிலில் வந்தன
தூத்துக்குடியில் இருந்து திருவண்ணாமலைக்கு யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்கள் ரெயிலில் வந்தன.
திருவண்ணாமலைக்கு சரக்கு ரெயில் மூலம் தூத்துக்குடியில் இருந்து 483 டன் யூரியா, 382 டன் ஸ்பிக் காம்ப்ளக்ஸ், 440 டன் டி.ஏ.பி. உரங்கள் வந்தது.
இதில் 450 டன் யூரியா, 258 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 328 டன் டி.ஏ.பி. உரங்கள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கும், 33 டன் யூரியா, 124 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 112 டன் டி.ஏ.பி. திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கும் பிரித்தளிக்கப்பட்டு உள்ளது.
இதனை வேளாண்மை உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) கோ.சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், நடப்பு மாதத்திற்கு 6 ஆயிரத்து 669 டன் யூரியா, 2 ஆயிரத்து 752 டன் டி.ஏ.பி., 1192 டன் பொட்டாஷ், 1084 டன் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 8 ஆயிரத்து 800 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரையின் படி பயிருக்கு தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் ரசீது பெற்று பயன்பெறலாம் என்றார்.