ஊர்மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


ஊர்மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 3 Dec 2022 1:00 AM IST (Updated: 3 Dec 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

தர்மபுரி

பாலக்கோடு:-

பாலக்கோட்டை அடுத்துள்ள திருமல்வாடி கிராமத்தில் ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது, தொடர்ந்து தீர்த்தகுடம், முளைப்பாரி அழைத்தல், மங்கள இசை உள்ளிட்ட யாகங்கள் வளர்க்கப்பட்டு அக்னி ஆராதனை செய்யப்பட்டு, கும்ப பிரதிஷ்டை நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று யாகசாலையில் இருந்து கும்பத்தை ஊர் கவுண்டர்கள் தலை மீது எடுத்து சென்று கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. பல்வேறு திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவையொட்டி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story