எரிபொருளாக பயன்படுத்த வைத்திருந்த 12 முந்திரி தோடு மூடைகள் பறிமுதல்


எரிபொருளாக பயன்படுத்த வைத்திருந்த 12 முந்திரி தோடு மூடைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எரிபொருளாக பயன்படுத்த வைத்திருந்த 12 முந்திரி தோடு மூடைகள் பறிமுதல்

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை விழா நடந்து வருகிறது. இதையொட்டி கோவில் அருகில் தற்காலிக இனிப்பு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த கடைகளில் சுகாதார சீர்கேடை ஏற்படுத்தும் முந்திரி தோடை எரிபொருளாக பயன்படுத்தக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதை மீறி முந்திரிதோடு பயன்படுத்தப்படுகிறதா? என்று குருந்தன்கோடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் ராமகிருஷ்ணன், அருள் தாஸ் ஆகியோர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தாமஸ், செல்லத்துரை, முருகன், ராஜசேகர், ஜெகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது கோவில் அருகே உள்ள ஒரு தென்னந்தோப்பில் 12 முந்திரி தோடு மூடைகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. உடனே முந்திரி தோடு மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் எரிபொருளாக முந்திரி தோடு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இனிப்பு கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story