மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட உசிலம்பட்டி, தேனி டிக்கெட் முன்பதிவு மைய நேரம் மாற்றம்


மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட  உசிலம்பட்டி, தேனி டிக்கெட் முன்பதிவு மைய நேரம் மாற்றம்
x

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட உசிலம்பட்டி, தேனி டிக்கெட் முன்பதிவு மைய நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

மதுரை


மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட தேனி, உசிலம்பட்டி மற்றும் ஆண்டிபட்டி ரெயில்வே முன்பதிவு மையங்களின் நேரம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, தேனி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டியில் உள்ள ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் நாளை(வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் 6-ந் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் செயல்படும்.

இதில் தேனி முன்பதிவு மையம் 6-ந் தேதிக்கு பின்னர், காலை 8 மணி முதல் காலை 11.30 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்படும். உசிலம்பட்டி, ஆண்டிபட்டி முன்பதிவு மையம் காலை 8 மணி முதல் காலை 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் செயல்படும்.


Next Story