உத்தண்டி அய்யனார் கோவில் குடமுழுக்கு


உத்தண்டி அய்யனார் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்குவளை அருகே உத்தண்டி அய்யனார் கோவில் குடமுழுக்கு

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

திருக்குவளையை அடுத்துள்ள கொத்தங்குடியில் உத்தண்டி அய்யனார், தூண்டிகாரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு விழா கடந்த 20-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தியுடன் முதல்கால யாக சாலை பூஜையுடன் பூர்ணாஹூதி நடைபெற்றது. பின்னர் 2-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று மகா பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைப்பெற்றது. பின்னர் சிவாச்சாரியர்கள் கடத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சித்தி விநாயகர், வாராகி அம்மன், இந்திராணி அம்மன், கவுமாரி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story