ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

புதுப்பேட்டை அருகே ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கடலூர்

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே நல்லூர்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப் பணிகள் நிறைவுபெற்று நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 30-ந்தேதி யாக சாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு 3-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. பின்னர் புனிதநீர் அடங்கிய கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க நிறுவனத்தலைவர் சக்தி அன்பழகனார் கலந்துகொண்டு மேல்மருவத்தூர் சித்தர் வழிபாட்டு முறைப்படி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். விழாவில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், தொரப்பாடி நகர செயலாளர் கனகராஜ், ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பாவதி சிவச்சந்திரன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி புதுப்பேட்டை போலீசார், இன்ஸ்பெக்டர் நந்த குமார் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


Next Story