தைப்பூசத்தையொட்டி ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவிலில் மலையின் கீழ் தேரோட்டம்நேற்று நடைபெற்றது.


தைப்பூசத்தையொட்டி ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவிலில் மலையின் கீழ் தேரோட்டம்நேற்று நடைபெற்றது.
x

தைப்பூசத்தையொட்டி ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவிலில் மலையின் கீழ் தேரோட்டம்நேற்று நடைபெற்றது.

திருப்பூர்

ஊத்துக்குளி,

தைப்பூசத்தையொட்டி ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவிலில் மலையின் கீழ் தேரோட்டம்நேற்று நடைபெற்றது.

திருக்கல்யாணம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை நேரத்தில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் மாலை 4 மணிக்கு மேல் சாமி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தேரோட்டம்

நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கீழ் தேரோட்டம் நடைபெற்றது. நேற்றுஅதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும் அதனைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு மகா தீபாராதனை அதனைத்தொடர்ந்து சாமி புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 6:30 மணிக்கு சாமி ரத ஆரோகணம் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் இப்பகுதியைச்சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரில் வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் பக்தர்களுக்குசிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

பம்பை அதிர்வேட்டுகள் முழங்க, சிறப்பு நாதஸ்வர இசையுடன் பக்தர்களின் கதித்தமலை முருகனுக்கு அரோகரா கோஷம் முழங்க பக்தர்களின் வெள்ளத்தின் நடுவே திருத்தேரானது கிழக்கு ரத வீதியில் உள்ள தேர்நிலையிலிருந்து மெல்ல அசைந்து ஆடி வடக்கு ரதவீதி வழியாக மேற்கு ரத வீதி கார்னரில் பகல் 11 மணிக்கு நிறுத்தப்பட்டது.

அன்னதானம்

மீண்டும் மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு திருப்பூர் சாலை வழியாக தேர் நிலை நிறுத்தப்பட்டது. இதில் செயல் அலுவலர் மாலதி, ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, அரசியல் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், முன்னாள் அறங்காவலர் குழுவினர், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நேற்று தைப்பூச தேரோட்டத்தை அடுத்து ஊத்துக்குளியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊத்துக்குளி போலீசார் செய்திருந்தனர்.

8-ந்தேதி மலைத்தேரோட்டம்

இன்று (திங்கட்கிழமை) பரிவேட்டை நடைபெறும். 7-ந்தேதி இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சாமி வீதிஉலா காட்சி நடைபெறும். 8-ந்தேதி காலை 7 மணிக்கு கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணம் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

அன்று இரவு மகா தரிசனம் சுப்பிரமணியசாமி வள்ளி- தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். 9-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழா உடன் தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.



Next Story