உற்சவர்கள் வீதி உலா


உற்சவர்கள் வீதி உலா
x

தேசூர் காசி விஸ்வநாதர் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு உற்சவர்கள் வீதி உலா நடந்தது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

தேசூர் பேரூராட்சியில் உள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் 2-ம் நாள் திருவிழா நடந்தது.

காலையில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி தாயார், வள்ளி, தெய்வானை, முருகர், விநாயகர், நடராஜர் ஆகிய மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், திருநீர், இளநீர் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்து பின்னர் உற்சவர் சந்திரசேகர், விசாலாட்சிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மணி முத்து பல்லக்கில் வைத்து பகலில் வீதி உலா வந்தனர்.

இரவு சந்திரசேகர், விசாலாட்சி அம்மன், பராசக்தி ஆகிய சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சந்திரபிரபை வாகனத்தில் வீதி உலா நடந்தது. தொடர்ந்து வாணவேடிக்கை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வீதிகளில் சாமி உலா வரும்போது மாக்கோலம் போட்டு, மா இலை தோரணம் கட்டி, தேங்காய் உடைத்து. கற்பூரம் ஏற்றி பக்தர்கள் வரவேற்றனர். சில பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஜல்லடை விளக்கு ஏற்றி சுற்றி வந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை, பாணம்பட்டு அங்கமுத்து வகையறாவினர் செய்திருந்தனர்.



Next Story