உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில்கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்:பொதுமக்கள் வலியுறுத்தல்


உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில்கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்:பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டகர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

தேனி

உத்தமபாளையத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் வெளிநோயாளிகளாக 900-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு 70-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளது. மருத்துவமனையில் போதிய கட்டிட வசதி இருந்தும் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். தற்போது 3 டாக்டர்கள் மட்டும் உள்ளனர். இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவமனை உள்ளதால் அந்த பகுதியில் நடைபெறும் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை அளிக்க இங்கே கொண்டு வரப்படுகின்றனர். ஆனால் அவசர சிகிச்சை பிரிவு இருந்தும் டாக்டர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு சரியாக சிகிச்சை அளிப்பதில்லை என்றும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story