உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் நகராட்சி 2,4,6,7-வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

சின்னமனூர் நகராட்சி 2,4,6,7-வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் விடுதலை கழக அமைப்பின் தேனி மாவட்ட செயலாளர் தெய்வேந்திரன், தலைமை தாங்கினார். வக்கீல்கள் கணேசன், பால்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது. அரசு நிலத்தில் தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கை குறித்து ஆர்.டி.ஓ. பால்பாண்டியிடம் மனு கொடுத்தனர்.


Related Tags :
Next Story