வ.புதுப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை


வ.புதுப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
x

வ.புதுப்பட்டி பேரூராட்சி அலுவலகம் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

விருதுநகர்

வத்திராயிருப்பு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வ.புதுப்பட்டி பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. இந்த பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 8 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த பணியாளர் முத்து லட்சுமியை காரணமின்றி பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீக்கப்பட்ட பெண்ணை மீண்டும் பணி அமர்த்த கோரி பேரூராட்சி அலுவலகத்தை அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வத்திராயிருப்பு போலீசார் முற்றுகையிட்ட பொதுமக்கள், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து பணியில் இருந்து நீக்கிய பணியாளரை பணியில் சேர்ப்பதற்காக பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்த நிலையில் மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் பணியில் இணைப்பது சம்பந்தமாக பேரூராட்சி தலைவரிடம் பரிசீலனை செய்து பின்னர் தங்களுக்கு தகவல் கொடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story