மத்திய-மாநில அரசு பணிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்- ஓய்வூதியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
மத்திய-மாநில அரசு பணிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஓய்வூதியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பின் கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டத்தலைவர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் முன்னிலை வகித்தார். நிர்வாகி கலியமூர்த்தி அறிக்கையினை வாசித்தார். பொருளாளர் ராமமூர்த்தி வரவு-செலவை வசித்தார். சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகள் ராஜேந்திரன், வெங்கடாசலம், கதிர்வேல், செங்குட்டுவன், சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. மத்திய, மாநில அரசு பணிகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். விளைநிலங்களையும், நீர்நிலைகளையும் மாசுபடுத்தி உடல் நலனை கெடுக்கும் மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதையும், வணிக வளாகங்களில் பயன்படுத்துவதையும் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கணபதி வரவேற்றார். முடிவில் ராமையன் நன்றி கூறினார்.