சேமிப்பு கிடங்கு நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


சேமிப்பு கிடங்கு நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x

சேமிப்பு கிடங்கு நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல்

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன பணியாளர்கள் சங்கத்தின் 40-வது பொதுக்குழு கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் கவுரவ தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். சேலத்தை சேர்ந்த சேமிப்பு கிடங்கு மேலாளர் பிருந்தாவன் வரவேற்றார். பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் சங்கத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் சேமிப்பு கிடங்கு மேலாளர் அருண்ஜெகன் நாராயணன், பொதுச்செயலாளராக துணை மேலாளர் சுந்தர மகாலிங்கம், பொருளாளராக துணை மேலாளர் பிரபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து புதிய மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் கூட்டத்தில் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக ஏற்கப்பட்டது. அதன்படி, சேமிப்பு கிடங்கு நிறுவனங்களில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், காஞ்சீபுரம் சேமிப்பு கிடங்கு மேலாளர் கண்ணன், துணை மேலாளர் சிங்காரவேலன், ராமநாதபுரம் பட்டினம்காத்தான் சேமிப்பு கிடங்கு மேலாளர் ரகுராமன், விழுப்புரம் சேமிப்பு கிடங்கு மேலாளர் சித்ரா, திருச்சி சேமிப்பு கிடங்கு மேலாளர் செந்தில், மேட்டுப்பாளையம் மண்டல அலுவலக டிரைவர் ஜெயக்குமார், மீளவிட்டான் சேமிப்பு கிடங்கு மேலாளர் ஈடாடி, ஆரணி சேமிப்பு கிடங்கு மேலாளர் செல்வி, தேனி சேமிப்பு கிடங்கு மேலாளர் காவியநாயகி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். முடிவில் திண்டுக்கல் சேமிப்பு கிடங்கு உதவி மேலாளர் மாரியப்பன் நன்றி கூறினார். திண்டுக்கல் மண்டல அலுவலக டிரைவர் எட்வர்டு கூட்ட நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சேமிப்பு கிடங்கு நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story