காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்பவேண்டும்


காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்பவேண்டும்
x

காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்று எம்.ஜி.ஆர். கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்ட எம்.ஜி.ஆர். கழக நிர்வாகிகள் கூட்டம் ஆம்பூர் பூந்தோட்ட பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு எம்.ஜி.ஆர். கழக மாநில செய்தி தொடர்பாளர் ஆம்பூர் சிவகுமார் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட அவைத்தலைவர் காசிநாதன், வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் நித்தியானந்தம், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆம்பூர் நகர அவைத்தலைவர் மாணிக்கவேல் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கண், காது, மூக்கு தொண்டை ஆகியவற்றிற்கு உரிய டாக்டர்கள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே உரிய டாக்டர்களை நியமிக்க வேண்டும். ஆம்பூர் நகரில் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளதால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


Next Story