47,583 பேருக்கு கொரோனா தடுப்பூசி


47,583 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 2,064 இடங்களில் நடந்த முகாம்களில் 47,583 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 2,064 இடங்களில் நடந்த முகாம்களில் 47,583 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

கொரோனா தடுப்பூசி முகாம்

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெற்றது. தற்போது தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதையடுத்து பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று 2,064 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. மேலும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் இலக்கியம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம், தர்மபுரி நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், தர்மபுரி தாசில்தார் ராஜராஜன், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுசீந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

கடத்தூர் ஒன்றியம்,ராமியணஅள்ளியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தொடங்கி வைத்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் அரசு, ஒன்றியக்குழு உறுப்பினர் கண்மணி லெனின், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பரிமளா கருணா, ஊராட்சி செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2,064 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 47,583 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.


Next Story