செல்லப்பிராணிகளுக்கான தடுப்பூசி முகாம்


செல்லப்பிராணிகளுக்கான தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உச்சிப்புளியில் செல்லப்பிராணிகளுக்கான தடுப்பூசி முகாம் நடந்தது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், உச்சிப்புளியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செல்லப் பிராணிகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு என்மனம்கொண்டான் ஊராட்சி தலைவர் கார்மேகம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.இதைத் தொடர்ந்து நாய் வளர்ப்போர் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

மேலும் இதைத்தொடர்ந்து குடற்புழு நீக்க மருந்துகள் மற்றும் கால்நடை நல துண்டு பிரசாரங்கள் கால்நடை வளர்ப்பு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து உச்சிப்புளி அரசு மேல்நிலைப் பள்ளியில் கால்நடை நல விழிப்புணர்வு முகாம் நடைபெற்றன.முகாமை கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன், கால்நடை பராமரிப்பு நோய் புலனாய்வு உதவி இயக்குனர் டாக்டர் நேரு குமார் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் டாப்னி மற்றும் தேவகி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.இதில் கால்நடை ஆய்வாளர் ஜோசி தங்கராணி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் லட்சுமி, சீனிவாசன், கல்யாணி உள்ளிட்டவர்கள் முகாமில் பங்குபெற்று கால்நடை உரிமையாளர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினர்.


Next Story