ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும்-ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்


ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும்-ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
x

ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும் என ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தற்போதைய தட்பவெப்ப சூழ்நிலைகளில் கோழிகளை நச்சு உயிரி மற்றும் நுண்ணுயிரி நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள கால்நடை டாக்டர்களின் ஆலோசனைபடி தீவனங்களில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். பருவமழை காலங்களில் மழைநீர் கொட்டகையினுள் புகுவதால், கோழி எருவில் ஈக்களின் புழுக்கள் பெருகுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளில் உள்ள எருவை அவ்வப்போது அகற்ற வேண்டும். அவ்வாறு முடியாதபட்சத்தில் புழுக்களை கொல்லும் மருந்தை கோழி எருவின் மேல் தெளிக்க வேண்டும் அல்லது கோழித்தீவனங்களில் கலந்து விட வேண்டும். வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் துள்ளுமாரி நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கால்நடை டாக்டரை அணுகி ஆடுகளுக்கு துள்ளுமாறி நோய் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story