நாய் குட்டிகளுக்கு பார்வோ வைரஸ் தடுப்பூசி போட வேண்டும் ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்


நாய் குட்டிகளுக்கு பார்வோ வைரஸ் தடுப்பூசி போட வேண்டும்  ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
x

நாய் குட்டிகளுக்கு பார்வோ வைரஸ் தடுப்பூசி போட வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நாமக்கல்

நாமக்கல்:

நாய் குட்டிகளுக்கு பார்வோ வைரஸ் தடுப்பூசி போட வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 4 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 70 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 2 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்று மணிக்கு 8 கி.மீ.வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும்.

வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் வேகம் அதிகபட்சமாக 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.

நாய்களுக்கு தடுப்பூசி

சிறப்பு வானிலையை பொறுத்தவரையில் தமிழகத்தில் கோடை மழைக்கு பின் தொடங்க இருக்கும், தென்மேற்கு பருவமழை காலத்தில் நாய்களில் பார்வோ வைரஸ் ரத்த கழிச்சல் ஏற்படுகிறது. இந்த நோய் 6 வாரம் முதல் 6 வயதுடைய நாய்களை அதிகமாக தாக்குகிறது. இந்த நோயினால் பாதிக்கப்படும் நாய்களில் 86 சதவீதம் தடுப்பூசி போடப்படாத நாய்கள் ஆகும். முறையாக சிகிச்சை அளிக்காவிட்டால், பாதிக்கப்பட்ட நாய்கள் இறந்து விடும்.

இந்த நோயினை தடுப்பதற்கு முதல் நடவடிக்கையாக நாய்க்குட்டிகளை 1½ மாதத்திற்கு பிறகு தாயிடம் இருந்து பிரிக்க வேண்டும். இவ்வாறு பிரிக்கும் முன்பு நாய் குட்டிகளுக்கு பார்வோ வைரஸ், எலிக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கான தடுப்பூசியை போட வேண்டும். தடுப்பூசி போடுவதற்கு முன்பு நாய் குட்டிகளுக்கு கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் படி குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story