தடகள போட்டியில் வடக்கன்குளம் பள்ளி மாணவர் சாதனை


தடகள போட்டியில் வடக்கன்குளம் பள்ளி மாணவர் சாதனை
x

தடகள போட்டியில் வடக்கன்குளம் பள்ளி மாணவர் சாதனை படைத்தார்.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

போபாலில் இளையோருக்கான கேலோ இந்தியா தடகள போட்டி நடைபெற்றது. இதில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா பள்ளி மாணவர் கு.பாலஜீவா நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும், நெல்லையில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா பள்ளி மாணவர் அணி முதலிடம் பிடித்தது. இதில் தடகள போட்டியில் 15 தங்கம், 15 வெள்ளி, 10 வெண்கலம் பதக்கம் பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளனர்.

பயிற்சி அளித்த ஆசிரியர்கள் முனிராஜா, ஜஸ்டின், அய்யப்பன், வேல்முருகன், சிவா ஆகியோரை பள்ளி தலைவர் கிரகாம்பெல், பள்ளி தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையாண்டி உள்பட பலர் பாராட்டினார்கள்.


Next Story