வடமாடு எருதுகட்டு விழா


வடமாடு எருதுகட்டு விழா
x
தினத்தந்தி 27 Aug 2023 12:15 AM IST (Updated: 27 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வடமாடு எருதுகட்டு விழா நடைபெற்றது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உலையூர் கிராமத்தில் மருது உடையார் அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி 2 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் வடமாடு எருதுகட்டு விழா நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 17 காளைகள் பங்கேற்றன.

இந்த காளைகளை உலையூர் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடக்கினர். மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் ரொக்க பணம், பரிசு பொருட்கள் கிராமத்தின் சார்பாக வழங்கப்பட்டது.


Next Story