வடமாடு மஞ்சுவிரட்டு


வடமாடு மஞ்சுவிரட்டு
x

வடமாடு மஞ்சுவிரட்டு

ராமநாதபுரம்

தொண்டி

திருவாடானை தாலுகா அரசூர் கிராமத்தில் குருந்தமுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் விழாவையொட்டி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. கிராமத் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இளைஞர் மன்ற தலைவர் சேதுராமன் முன்னிலை வகித்தார். இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 15 மாடுகள் கலந்து கொண்டன. ஒரு அணிக்கு மாடுபிடி வீரர்கள் 12 பேர் வீதம் 14 அணிகள் கலந்து கொண்டன. இதில் சிவகங்கை கிரேட் காளி, மதுரை மாவட்டம் கச்சிராயன்பட்டி ராதாகிருஷ்ணன் ஆகியோரது மாடுகள் பிடிபடவில்லை. இந்த மாடுகளுக்கு குத்து விளக்கு, அண்டா போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு மாட்டிற்கும் 10 ஆயிரம் வீதம் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அரசூர் கிராமத்தினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.


Next Story