வடபழனி கோவில் நிலத்தை அளவீடு செய்ய வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு
வடபழனி கோவில் நிலத்தை அளவீடு செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமாக சென்னையில் பல இடங்களில் நிலங்கள் உள்ளன. இதில், ஒரு நிலம் சாலிகிராமம் வீரமாமுனிவர் தெருவில் உள்ளது. மொத்தம் ஒரு ஏக்கர் 92 சென்ட் உள்ள இந்த நிலத்தை அளவீடு செய்ய மாநகராட்சி மற்றும் மாம்பலம் தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், கோவிலின் துணை ஆணையர் கடந்த 2016-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தகுதியான சர்வேயரை கொண்டு கோவில் நிலத்தை அளவீடு செய்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாம்பலம் தாசில்தாருக்கு உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
Related Tags :
Next Story