வடுகர்பேட்டை புனித ஆரோக்கியமாதா ஆலய பெருவிழா கொடியேற்றம்
வடுகர்பேட்டை புனித ஆரோக்கியமாதா ஆலய பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
கல்லக்குடி, ஆக.31-
கல்லக்குடி அருகே வடுகர்பேட்டையில் புனித ஆரோக்கியமாதா ஆலயம் உள்ளது. திருச்சி மாவட்ட வேளாங்கண்ணி என பக்தர்களால் போற்றப்படும் இந்த ஆலயத்தின் 349-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம் நேற்று மாலையில் நடைபெற்றது. குடந்தை மறைமாவட்ட முதன்மைகுரு அமிர்தசாமி தலைமையில் மாதா சொரூபம் தாங்கிய கொடியை புனிதப்படுத்தி கொடியேற்றினர். இந்த விழா வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது. தினமும் மாலை 6.30 மணியளவில் நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வேண்டுதல் சப்பரபவனி நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 8-ந்தேதி அன்னையின் பிறப்பு பெருவிழா திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.மாலை 4 மணிக்கு தெலுங்கானா குருமட அதிபர் சார்லஸ் பாபு தலைமையில் மாதா சொரூபம் தாங்கிய தேரோட்டம் நடக்கிறது. இதனையடுத்து 9-ந்தேதி மாலை 6.30 மணி அளவில் கொடியிறக்கத்துடன் இந்த ஆண்டுக்கான விழா நிறைவு பெறுகிறது.