வைத்தியநாத சுவாமி கோவில் மாசி மக திருவிழா


வைத்தியநாத சுவாமி கோவில் மாசி மக திருவிழா
x

வைத்தியநாத சுவாமி கோவில் மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் மாசி மக திருவிழா நேற்று தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவையொட்டி நேற்று காலை கோவில் கொடி மரத்திற்கு பால், மஞ்சள், சந்தனம், இளநீர், பழச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி, அம்பாள் கொடி மரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் மலர்களால் அலங்கரித்து சிறப்பு தீபாராதனை காட்டி, கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதைத்தொடர்ந்து இரவில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்தது. இதையொட்டி தினமும் இரவில் ஆதிசேஷ வாகனம், பூத வாகனம், கைலாச வாகனம், இடப வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. வருகிற மார்ச் 3-ந் தேதி சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. 5-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதில் காலை 11 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. 6-ந் தேதி மாசி மகத்தன்று தீர்த்தவாரி நடக்கிறது.


Next Story