விவசாயத்துக்காக வைகை அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
விவசாயத்துக்காக வைகை அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முல்லை பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக விவசாயம் செய்வதற்கு நாள் ஒன்றுக்கு 900 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6,739 மில்லியன் கன அடி தண்ணீரை ஜூன் 2-ந் தேதி (நாளை) முதல் வைகை அணையில் இருந்து திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,797 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 244 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story