முத்து மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா


முத்து மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பனங்குடி முத்து மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பிள்ளை பனங்குடியில் முத்து மாரியம்மன், வீரமா காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர். இதை தொடர்ந்து சிவன் கோவிலில் உள்ள முருகனுக்கு பாலாபிஷேகமும்,அம்மனுக்கு பால், பன்னீர், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், குங்குமம், மாப்பொடி, திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து முத்து மாரியம்மன், வீரமா காளியம்மன், காத்தவராயசாமி வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் பெரியாச்சி படையல், விடையாற்றி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story