திருமறைநாதர் கோவில் வைகாசி திருவிழா
திருவாதவூர் திருமறைநாதர் கோவில் வைகாசி திருவிழா 9-ந்தேதி தொடங்குகிறது.
மேலூர்,
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட மேலூர் அருகே உள்ள திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வைகாசி திருவிழா இந்த மாதம் தொடங்கி 31-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக பிடாரி அம்மனுக்கு 11 நாள் திருவிழாவும் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு திருவாதவூர் திருமறைநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. வருகிற 9-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் வைகாசி திருவிழா தொடங்குகிறது.
17-ந்தேதி அன்று பிடாரி அம்மன் திருவிழா நடைபெறுகிறது. 23-ந் தேதி அன்று சட்டதேர் நடக்கிறது. 24-ந்தேதி கொடியேற்றத்துடன் திருமறை வேதநாயகி அம்மாள் திருவிழா அன்று கோவிலை சுற்றி பஞ்சமூர்த்தி சுவாமி உலா வருகிறது. 31-ந்தேதி அன்று 5-ம் நாள் திருவிழாவாக மாங்கொட்டை திருவிழா நடைபெறுகிறது. அன்று சாமி 5 பஞ்ச மூர்த்திகளுடன் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் உள்ள மேலூருக்கு சப்பரத்தில் வருகிறார். வரும் வழியில் பல மண்டக படிகளுக்கு சென்று அன்று இரவு சிவன் கோவிலை வந்து அடைந்து மறுநாள் காலை இங்கிருந்து புறப்பட்டு மீண்டும் திருவாதவூர் கோவிலுக்கு சென்று அடையும். இதையடுத்து ஜூன் மாதம் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.