திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா இன்று தொடக்கம்


திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலில்  வைகாசி பெருந்திருவிழா இன்று தொடக்கம்
x

திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா இன்று தொடங்குகிறது

மதுரை


மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. நிகழ்ச்சியில் முதலாவதாக நேற்று மாலை வாஸ்து சாந்தி நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது, தொடர்ந்து தினமும் காலை சப்பரம் மற்றும் பல்லக்குகளில் பெருமாள் எழுந்தருளுகிறார். தினமும் இரவு சிம்மம், அனுமார், சேஷ, கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக குதிரை வாகனம் ஜூன் 1-ந் தேதி, 2-ந்தேதி மதியம் 3 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். அதைத் தொடர்ந்து விழாவில் 11-ம் நாளான 4-ந்தேதி திருமஞ்சனத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


Next Story