தேனிஅம்மன் கோவிலில் வைகாசி விசாகம்


தேனிஅம்மன் கோவிலில் வைகாசி விசாகம்
x

தேனிஅம்மன் கோவிலில் வைகாசி விசாக நிகழ்ச்சி நடைபெற்றது

மயிலாடுதுறை

சீர்காழி

சீர்காழி அருகே கொண்டல் ஊராட்சிக்குட்பட்ட தேனூர் கிராமத்தில் தேனி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மலர்அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதேபோல் சீர்காழி தென்பாதி கதிர்காம பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தை யொட்டி முருகனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சீர்காழி பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் வைகாசி விசாகம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.






Next Story