கட்டாரிமங்கலம் கோவிலில் வைகாசி விசாக திருவிழா


கட்டாரிமங்கலம் கோவிலில் வைகாசி விசாக திருவிழா
x

கட்டாரிமங்கலம் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடந்தது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு சிவகாமி அம்பாள், அழகிய கூத்தர் உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை, அலங்கார பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து வள்ளிதேவசேனா, சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலையில் பிரதோஷத்தையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதைதொடர்ந்து நந்தியம் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story