பாலையம்பட்டி, கோபாலபுரம் வேணுகோபால சுவாமி கோவில்களில் வைகாசி விசாக திருவிழா
பாலையம்பட்டி, கோபாலபுரம் வேணுகோபால சுவாமி கோவில்களில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே பாைலயம்பட்டியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெற உள்ள இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருக்கால்யாண நிகழ்ச்சி வருகிற 9-ந்தேதி வியாழன்கிழமை நடைபெற உள்ளது. மேலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
இதேபோல் கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோவில் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சிகளில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story