வைரக்கல் பதித்த தங்க வேல் காணிக்கை
பழனி முருகன் கோவிலில் பக்தர் ஒருவர் முருகப்பெருமானுக்கு வைரக்கல் பதித்த தங்க வேலை காணிக்கையாக வழங்கினார்.
திண்டுக்கல்
கோவையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், பழனி முருகன் கோவிலுக்கு நேற்று வந்தார். அவர், முருகப்பெருமானுக்கு வைரக்கல் பதித்த தங்க வேலை கோவிலில் நேற்று காணிக்கையாக வழங்கினார். இந்த தங்க வேல் சுமார் 1.09 கிலோ எடை கொண்டது. அதை பெற்று கொண்ட கோவில் நிர்வாகத்தினர், மலைக்கோவில் உட்பிரகாரத்தில் உள்ள சண்முகர்-வள்ளி தெய்வானைக்கு முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த வேலை, உச்சிகால பூஜையில் மூலவர் சிலையின் அருகில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். கார்த்திகை, மாத சஷ்டி மற்றும் விழா காலங்களில் முருகனுக்கு இந்த வேல் சாத்தப்பட உள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story