வாஜ்பாய் நினைவு தினம்


வாஜ்பாய் நினைவு தினம்
x

தூத்துக்குடியில் வாஜ்பாய் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்வாய் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்ட வாஜ்பாய் உருவப்படத்துக்கு பா.ஜனதா மாநில துணைத்தலைவரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான சசிகலா புஷ்பா தலைமை தாங்கி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன், மாவட்ட துணை தலைவர்கள் சிவராமன், வாரியார், சுவைதார், மண்டல தலைவர்கள் ராஜேஷ்கனி, மாதவன், சிவகணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story