வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
நெமிலியில் வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
ராணிப்பேட்டை
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அனுக்ஞை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், அஷ்டபந்தன சமர்ப்பணம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. காலை 6 மணியளவில் இரண்டாம் கால பூஜையும், 8 மணியளவில் நமாஹாபூர்னஹூதியும், 8.30 மணிக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து வலம்புரி விநாயகருக்கு மஹா அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், வாணவேடிக்கையுடன் விநாயகர் ஊர்வலம் நடந்தது.
Related Tags :
Next Story