வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் விடையாற்றி விழா
வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் விடையாற்றி விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வலங்கைமான்:
வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் விடையாற்றி விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாடைக்காவடி திருவிழா
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் வரதராஜன்பேட்டை தெரு பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பாடைக்காவடி திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான பாடைக்காவடி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விடையாற்றி விழா
மாலை வெள்ளி அன்னவாகனத்தில் அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றபோது, செம்மறி ஆடு பிடித்து வரப்பட்டு கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த செடில் மரத்தில் செம்மறியாடு ஏற்றப்பட்டு, செடில் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை
6 மணி அளவில் விடையாற்றி விழா நடந்தது.
விழாவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து முக்கிய வீதிகளின் வழியாக வீதிஉலா நடைபெற்றது. அப்போது வீடுகளில் இருந்து மஞ்சள்நீராட்டு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கருவறை அம்மனுக்கு சிறப்புஅபிஷேக, ஆராதனை நடந்தது.