மேலப்பாளையத்தில் கேக் வெட்டி, புறா பறக்க விட்டு காதலர் தினம் கொண்டாட்டம்
மேலப்பாளையத்தில் கேக் வெட்டி, புறாக்களை பறக்க விட்டு காதலர் தினம் கொண்டாடப்பட்டது.
மேலப்பாளையத்தில் கேக் வெட்டி, புறாக்களை பறக்க விட்டு காதலர் தினம் கொண்டாடப்பட்டது.
காதலர் தினம்
உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர்கள் ரோஜா பூ மற்றும் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
காதலித்து திருமணம் செய்த கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவரும் காதலர் தின பரிசு பொருட்களை வழங்கினார்கள்.
கேக் வெட்டி கொண்டாட்டம்
இந்த நிலையில் நெல்லை மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட காதல் தம்பதியினர் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர். கேக்கில், `ஆதலால் காதல் செய்வீர்' என எழுதப்பட்டிருந்தது.
புறா பறக்க விட்டனர்
இதன் பின்னர் அவர்கள் எடுத்து வந்த ஜோடி புறாக்களை வானில் பறக்க விட்டும், இனிப்புகள் வழங்கியும் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
காதலர் தினத்திற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் காதலர் தினத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புறாக்களை பறக்க விட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் பாதுகாப்பு
இதற்கிடையே நெல்லை மாவட்ட அறிவியல் மையம் மற்றும் பூங்காக்களில் காதலர்கள் வந்தால் அவர்களை எதிர்ப்போம் என்று சில அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.
இதையொட்டி மாவட்ட அறிவியல் மையம், பூங்காக்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.