நெல்லையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி


நெல்லையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி
x

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நெல்லையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது.

திருநெல்வேலி

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நெல்லையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது.

நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதாசாகு சமீபத்தில் தெரிவித்தார்.

வாக்குப்பதிவு எந்திரங்கள்

இதையொட்டி கடந்த வாரம் நெல்லையில் இருந்து நாடாளுமன்ற தேர்தலுக்காக தென்காசி, சிவகங்கை, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு தேவையான, யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை காட்டும் 'வி.வி.பேட்' எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதுதவிர நெல்லையில் தேர்தல் ஆணைய குடோனில் 2,435 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 4,298 வாக்குப்பதிவு எந்திரங்கள், 3,284 'வி.வி.பேட்' எந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

சரிபார்ப்பு பணி

இந்த எந்திரங்கள் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதையொட்டி அவற்றை சரிபார்த்து, சரியாக செயல்படுகிறதா? என்பதை உறுதி செய்யும் பணி நேற்று தொடங்கியது. நெல்லை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன் உத்தரவுப்படி மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் மேற்பார்வையில் தேர்தல் தாசில்தார் பாலகிருஷ்ணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், குடோன் திறக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திர பெட்டிகளும் திறக்கப்பட்டன.

பின்னர் அந்த எந்திரங்களின் செயல்பாடு குறித்த பரிசோதனை தொடங்கி நடைபெற்றது. இதற்காக பெங்களூருவில் இருந்து பெல் நிறுவனத்தை சேர்ந்த 8 என்ஜினீயர்கள் வந்துள்ளனர்.


Next Story