கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை


கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
x

கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை

நெமிலி காமராஜர் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி, இவரது மகன் சிவானந்தம் (வயது 35). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். தனது நண்பருடன் சேர்ந்து மாத சீட்டு கட்டி வந்ததாகவும், கடந்த சில மாதங்களாக நண்பர் சீட்டு பணம் கட்டாததால் தானே அவருக்கான சீட்டு பணம் கட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பணப்பிரச்சினை ஏற்பட்டு நேற்று முன் தினம் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி பிரேமா மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிவானந்தம் கிடைக்காததால் நெமிலி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தனர். இந்தநிலையில் நேற்று காலை அசநெல்லிகுப்பம் செல்லும் வழியில் உள்ள கிணற்றில் சிவானந்தம் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சென்று சிவானந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணயில் சிவானந்தம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.


Next Story