வள்ளலார் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கம் தொடக்கம்
வடலூரில் வள்ளலார் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கம் தொடங்கப்பட்டது.
வடலூர்,
வடலூரில் வர்த்தகர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வடலூர் வள்ளலார் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரால் புதியதாக வர்த்தக சங்கம், தொடங்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அதன்படி, தலைவராக கிருஷ்ணா பேக்கரி அதிபர் எஸ்.பிரகாஷ், பொது செயலாளராக எம்.கே. பார்த்திபன், பொருளாளராக ரங்கசாமி மற்றும் துணை தலைவர்களாக குமாரவேல், ஆல்பர்ட், துணைச்செயலாளர்களாக ராஜசேகரன், ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர்களாக சுப்புராயன், சங்கம் தொடக்கம் சுதா, அப்துல்மாலிக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையின் கீழ் இயங்கும் வர்த்தக அமைப்புடன் இணைந்து பணியாற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் சங்கத்தை வலுப்படுத்தும் விதமாக புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதில் வர்த்தகர்கள் சங்கர், நந்தகுமார், சுரேஷ், ரவி, பழக்கடைரவி, செல்வம், அரவிந்தன், ஜெகன், விஷ்னுபிரசாத், ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.