வள்ளம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


வள்ளம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x

குளச்சல் கடலில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால், வள்ளம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் கடலில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால், வள்ளம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

மீன்பிடி துறைமுகம்

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமர மீனவர்களும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புவது வழக்கம். வள்ளம், கட்டுமர மீனவர்கள் அதிகாலையில் கரை அருகில் மீன் பிடித்துவிட்டு மதியம் கரைக்கு திரும்புவார்கள். தற்போது மேற்கு கடற் பகுதியில் கடந்த 1-ந்தேதி முதல் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது. இதனால் கடந்த 26 நாட்களாக விசைப்படகுகள் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆனால், வள்ளம் மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க சென்று வந்தனர்.

சூறைக்காற்று

இந்த நிலையில் நேற்று முதல் குளச்சல் கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும், வள்ளம், கட்டுமரங்களை மீனவர்கள் மேடான மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தினர்.

ஒரு சில வள்ளம் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவற்றில் குறைந்த அளவிலான மீன்களே கிடைத்தன. பெரும்பான்மையான வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லாததால் குளச்சலில் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.


Next Story