மீனவர்களுக்கு மதிப்பு கூட்டல் பயிற்சி


மீனவர்களுக்கு மதிப்பு கூட்டல் பயிற்சி
x

வாய்மேடு சிந்தாமணி காட்டில் மீனவர்களுக்கு மதிப்பு கூட்டல் பயிற்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வேதாரண்யம் தாலுகா வாய்மேடு சிந்தாமணி காட்டில் 500 மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஆறுகளிலும், கடலிலும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீன்பிடி தொழில் செய்து வந்தாலும் மீன்களை குறைந்த விலைக்கு விற்று தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். தலைஞாயிறை அடுத்த ஒரடியம்புலத்தில் உள்ள மீன்வள கல்லூரி மாணவ- மாணவிகள் மேற்கண்ட பகுதிக்கு சென்று மீனவர்களுக்கு மீன்பிடி முறைகளையும், மீன்களை மதிப்புக்கூட்டல் செய்து விற்பனை செய்வது எவ்வாறு என்பது குறித்தும் பயிற்சி அளித்தனர். இதில் மீன்வள கல்லூரி முதல்வர் பாலசுந்தரி, உதவி பேராசிரியர் துரை மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story