நாகை மாவட்டத்தில் மட்டுமே வம்சம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது


நாகை மாவட்டத்தில் மட்டுமே வம்சம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது
x

தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் மட்டுமே வம்சம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் மட்டுமே வம்சம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் ஆய்வு

நாகை அருகே திருக்குவளை அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். அப்போது கண் சிகிச்சைப்பிரிவு, சித்தா பிரிவு, பொது மருத்துவபிரிவு, ரத்த அழுத்தம் மற்றும் மகப்பேறு மையம், நவீன சமையல் கூடம் மற்றும் வம்சம் திட்டம் செயல்படுவது குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து திருக்குவளை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், பரிசு பொருட்களையும் கலெக்டர் வழங்கினார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

வம்சம் திட்டம்

தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் மட்டும்தான் வம்சம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் 24 மணி நேர தாய் சேய் நல கட்டுப்பாட்டு மையத்தை 9442374310 என்ற அலைபேசி எண்ணின் மூலமும், 04365-250310 என்ற தொலைபேசி எண்ணின் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.

பிரசவத்தின்போதும், பிரசவத்திற்கு பின்பு ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் மேற்கண்ட எண்களை தொடர்பு கொண்டு விளக்கங்கள் பெறலாம்.

ரூ.2 ஆயிரம் உதவி தொகை

வம்சம் திட்டத்தின் மூலம் திருக்குவளை தாலுகாவை சேர்ந்த தாய்மார்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.600 உதவித்தொகையுடன் நாகை கலெக்டர் சிறப்பு நிதியாக ரூ.1,400 கூடுதலாக சேர்த்து ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெண்மணி ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து, அருகில் உள்ள நூலகத்திலும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் ஜோஸ்பின்அமுதா, திருக்குவளை தாசில்தார் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story