வேன் கவிழ்ந்து 13 பேர் காயம்
கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த போது வேன் கவிழ்ந்து 13 பேர் காயமடைந்தனர்.
கோட்டூர்;
கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த போது வேன் கவிழ்ந்து 13 பேர் காயமடைந்தனர்.
வேன் கவிழ்ந்தது
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த 13 பேர் ஒரு மினி வேனில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்துக்கு வந்தனர். நேற்றுமுன்தினம் இரவு அவர்கள் சென்ற வேன் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே விக்கிரபாண்டியம் கிராமத்தில் சென்றது. அப்போது வேன் திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
13பேர் காயம்
இதில் வேனில் பயணம் செய்த 4 குழந்தைகள் உள்பட 13 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.பின்னர் அவர்கள் மற்றொரு வாகனம் மூலம் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டு சென்றனர். இரவில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து விக்கிரபாண்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.