ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; 2 தொழிலாளர்கள் பலி


ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; 2 தொழிலாளர்கள் பலி
x

ஊத்தங்கரை அருகே மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.

வேன் மோதியது

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை சேர்ந்தவர்கள் பீம்சிங் (வயது 35). குமார் (53). கூலித்தொழிலாளிகள். இவர்கள் 2 பேரும் நேற்று ஊத்தங்கரையில் இருந்து சிங்காரப்பேட்டைக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது பாம்பாறு அணை அருகே திருவண்ணாமலை பகுதியில் இருந்து ஊறுகாய் லோடு ஏற்றிக்கொண்டு பெங்களூரு நோக்கி சரக்கு வேன் ஒன்று வந்தது. வழியில் வேனின் டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து வேன் எதிரில் வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

2 பேர் பலி

இந்த விபத்தில், மோட்டார்சைக்கிளில் வந்த பீம்சிங், குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இறந்த 2 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று கதறி அழுதனர். விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story